வரலாற்று வழியிலும் அரசியல் வெளியிலும் இலங்கைத் தீவில் தமிழர்கள் பெற்ற உரிமை, தேசிய இன அடையாளம், தமிழர் தாயகம் சார்ந்த இறையாண்மை உள்ளிட்டவைகளின் கோர்வையே ஈழத்தமிழர்களின் நூற்றாண்டுப் போராட்டங்களுக்குக் காரணம். அரசியலில் சமவுரிமை என்று தொடங்கிய தமிழர் போராட்டங்கள், கல்வி, வேலைவாய்ப்பு மறுப்பு, இராணுவ ஒடுக்குமுறை, இனக்கலவரங்கள், படுகொலைகள் என தொடர்ந்த சிங்கள சர்வாதிகாரத்தின் பின்னரே தமிழருக்கான விடுதலை கூட்டணியை தமிழரசு கட்சி முன்னின்று தொடங்கி, தமிழீழத் தீர்வினை வட்டுக்கோட்டைப் பிரகடனம் வழியே முன்மொழிந்தது வரலாறு! 1976இல் […]